சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதல்

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தா : மே-03

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டோனி தலைமையிலான சென்னை அணி வழக்கம் போல இந்த சீசனிலும் வலுவான அணியாக விளங்கி வருகிறது. இதுவரை 8 ஆட்டத்தில் விளையாடி இருக்கும் சென்னை அணி 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி, 8 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts