சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி அணியுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 9-வது வெற்றி பெறும் முனைப்புடன் டெல்லி டேர் டெவில்சை சந்திக்கிறது.

டெல்லி : மே-18

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதுகின்றன. டோனி தலைமையிலான சென்னை அணி 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் தற்போது பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை எட்டிவிட்ட சென்னை அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் டாப்-2 இடத்தை உறுதி செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts