சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெங்களூரு : ஏப்ரல்-25

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தாலும் பெங்களூரு அணியிடம் தடுமாற்றம் காணப்படுகிறது. பெங்களூரு அணி 5 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts