சென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, மொகாலி, ஜெய்ப்பூர் ஆகிய 8 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் என்ற கணக்கில் 14போட்டியில் ஆட வேண்டும். லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள்‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியில் 23-வது ‘லீக்’ ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.  இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் – தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே 5 ஆட்டத்தில் 4 வெற்றி, 1 தோல்வியுடன் தலா 8 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணியை வீழ்த்தினால் சூப்பர் கிங்ஸ் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறும்.சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் விளையாடுவதால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். கொல்கத்தா அணியில் விளையாடும் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த ஆந்த்ரே ரசல் எந்த நேரத்திலும் ஆட்டத்தை மாற்றக்கூடியஅபாயகரமான வீர்ராக கருதப்படுகிறார். ரஸ்சல் இதுவரை 22 சிக்சர்கள் எடுத்து உள்ளார். இதுதவிர கிறிஸ் லின், நிதிஷ் ரானா, உதித்யா, கேப்டன் தினேஷ் கார்த்திக் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் கொல்கத்தா அணியில்உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனான டோனி சிறந்த அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.மேலும், ரெய்னா, டுபெலிசிஸ், வாட்சன் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுவது 4-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 3 ஆட்டத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வெற்றி பெற்று உள்ளது.  சூப்பர் கிங்சின் அதிரடி இன்றைய ஆட்டத்திலும் நீடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Related Posts