சென்னை சேப்பாக்கத்தில்  விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கடையில் பிராவோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வித்தியாசமான கேளிக்கைகளில் ஈடுபட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம்.  ராக் சாங்ஸ் பாடுவது, சுட்டுரை பக்கத்தில்தமிழில் பதிவது,   தமிழர்கள் கலாச்சார உடையான வேட்டி அணிந்து சிலம்பம் ஆடுவது போன்ற  வீடியோக்கள் தமிழ் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது மேலும்சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அவ்வப்போது பொதுமக்களிடையே தோன்றி இன்ப அதிர்ச்சி அளிப்பதும் குறிப்பிடத்தக்கது இந்நிலையில்  மேற்கிந்திய அணியின் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான பிராவோ சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கடைக்கு சென்று இருந்தார், அவரை  காண குவிந்த  ரசிகர்கள் பிராவோவுடன் செல்பி எடுத்தும் கையெழுத்து பெற்றும் மகிழ்ந்தனர். பின் செய்தியாளர்களிடம் பேசிய பிராவோ, சென்னை அணிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளதாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள . உலகக்கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணி மிக சிறப்பானது எனவும்  கூறினார்.

Related Posts