சென்னை தி.நகரில் ரூ.33.80 கோடி மதிப்பில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணிகள் தொடக்கம்

 

 

சென்னை தியாகராய நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 33 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணிகள் தொடக்கப்பட்டது.

சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல்களை சமாளிக்கும் வகையில் பல்வேறு பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. சென்னையின் நெரிசல் மிகுந்த பகுதியான தியாகராய நகரில் நடைபாதை வளாகம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், சுமார் 34 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை தியாகராய நகரில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. இதில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டு, பணிகளை தொடக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Related Posts