சென்னை பல்லாவரத்தில் முன் விரோதம் காரணமாக அதிமுக பிரமுகருக்கு அறிவாள் வெட்டு

சென்னை பல்லாவரத்தில் முன் விரோதம் காரணமாக அதிமுக பிரமுகர் ஒருவர் அறிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் அதிமுக வட்ட செயலாளர் விஜயகுமார். இவர் அப்பகுதியில் பொதுமக்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் விஜயகுமாரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த விஜயகுமாரை  அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதித்தனர். இது குறித்து பல்லாவரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts