சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த  மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை வேளையில் பரவலாக பெய்த  மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், சென்னையில் சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், தியாகராயநகர், கிண்டி, எழும்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை வேளையில் பரவலாக மழை பெய்தது.  இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Posts