சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவது யார் என்பதற்கான போட்டியில், சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.

மும்பை : மே – 22

கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல். போட்டியில் 56 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. புள்ளிகள் அடிப்படையில் ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. தொடக்கத்தில் இருந்தே கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதே நேரத்தில், தோனி தலைமையிலான சென்னை அணியில் ராயுடு, வாட்சன், தோனி ஆகியோர் விரைந்து ரன்களைக் குவிக்கக் கூடியவர்கள். இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இன்றைய ஆட்டம் கடைசிவரை விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts