சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஷெனாய்நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு, கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது,சென்னை மாநகராட்சியில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது என்று நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் இன்று நடந்த விசாரணையில், மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு அதிகாரிகள் அனைவரையும் கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். டி.ஜி.பி.யுடன் ஆலோசனை நடத்தி புதிய அதிகாரிகள் குழுவை நியமிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாநகராட்சியில் அனைத்து அலுவலகங்களிலும் ஊழல் கண்காணிப்பு பிரிவை தனியாக உருவாகி சிசிடிவி கேமராக்கள் பொறுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளனார் உத்தரவுகள் குறித்து நான்கு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts