சென்னை மெட்ரோவில் 50 விழுக்காடு கட்டணச் சலுகை அளிக்க முடிவு

ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிரிக்கும் விதமாக 50 விழுக்காடு கட்டணச் சலுகை  சென்னை மெட்ரோ முடிவெடுத்துள்ளது.

இந்தியாவின் 4 வது பெரிய மெட்ரோ ரயில் சேவையை சென்னை மெட்ரோ கொண்டுள்ளது. வார நாட்களில் ஒரு லட்சம் முதல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணிக்கின்றனர். ஆனால் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில்  60 ஆயிரம் பேருக்கும் குறைவான பயணிகளே மெட்ரோ சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க 50 விழுக்காடு கட்டணச் சலுகை வழங்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.  இது குறித்து ஆலோசனை நடத்தி வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts