சென்னை மெரினா கடற்கரையில் திட்டமிட்டபடி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும்

மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் திட்டமிட்டபடி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-20

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மே 17 இயக்கம் சார்பில், மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி திட்டமிட்டபடி, கண்ணகி சிலைக்கு பின்னால் கண்டிப்பாக நடைபெறும் என்று கூறினார். இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வீர மரணம் அடைந்த மாவீரர்களுக்கு அமைதியான முறையில், அறவழியில் நினைவஞ்சலி செலுத்துவோம் என்று கூறினார்.

Related Posts