சென்னை விமான நிலையத்தின் 2-ம் கட்ட விரிவாக்கப் பணிக்கு மத்திய சுற்றுச்சூழல்துறை ஒப்புதல்

சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிக்கு மத்திய சுற்றுச்சூழல்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை : ஜூன்-28

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாகவும், உள்நாட்டு விமான நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது. மக்கள் தொகை, நவீனமயமாக்கல், தொழில் வளர்ச்சி காரணங்களால் தற்போது விமானப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால், சென்னை விமான நிலையத்தில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இரண்டாயிரத்து 476 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு 2-ஆம் கட்ட விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிக்கு மத்திய சுற்றுச்சூழல்துறை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts