சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் அண்ணா காமராஜர் பெயரை சூட்ட கோரி மதிமுகவினர் போராட்டம்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் அண்ணா, காமராஜர் பெயரை சூட்ட கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மண்டல மதிமுக சார்பில், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கழக குமார் தலைமையில் விமான நிலையத்தை மதிமுக-வினர் முற்றுகையிட முயன்றனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்ததால், திரிசூலம் ரயில் நிலையம் அருகே,போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினரை போலீசார்  கைது செய்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈசுவரன், ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன்,மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.இராசேந்திரன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, மா.வை.மகேந்திரன், ஊனை பார்த்திபன், தேர்தல் பணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளர் முராத் புகாரி, தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன் உள்ளிட்ட நிர்வாகிகளும், கழகத் தோழர்களும் கலந்துகொண்டு கைதாகினர். சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு முனையம் அண்ணா பெயரிலும், உள்நாட்டு முனையம் காமராஜர் பெயரில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த முனையங்கள், 1மற்றும் 4 என மாற்றப்பட்டது. அவற்றுக்கு மீண்டும், அண்ணா – காமராஜர் பெயர்களை சூட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

Related Posts