சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம்; சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!

இலங்கையிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது  சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்துவந்த 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான 420 கிராம் எடைக்கொண்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்  செய்தனர். இதனையடுத்து கடத்தலில் ஈடுப்பட்ட இரண்டு பயணிகளை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts