சென்னை விமான நிலையத்தில் 38  லட்சம்  ரூபாய் மதிப்பிலான  தங்கம்  பறிமுதல்: சுங்கத்துறையினர் அதிரடி

திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் தங்கம் கட்த்தி வரப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகள்  விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதன் பேரில் பயணிகளிடம்  மேற்கொண்ட தீவிர சோதனையில் சென்னையச் சேர்ந்த  பயணியிடம்   ஒரு கிலோ 170  கிராம் எடைக்கொண்ட தங்கம் இருப்பது தெரியவந்த்து. இதன் மதிப்பு 38  லட்சம்  ரூபாய் ஆகும்.  தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியை கைது செய்து காவல்துறையினரிட்ம் ஒப்படைத்தனர்

இதனையடுத்து பயணியை கைது செய்த அதிகாரிகள் அவர் வைத்திருந்த  தங்கத்தையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Related Posts