சென்னை விமான நிலையத்தில்  53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் 

சென்னை விமான நிலையத்திற்கு இலங்கை, குவைத், மற்றும் இலங்கையிலிருந்து தங்கம் கடத்தப்படுவது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துக்குமார்,  நாசிக் மைதீன், புதுக்கோட்டையை சேர்ந்த சிக்கந்தர் பாஷா, குமரகுரு ஆகிய நான்கு பேரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 25 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 771கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சென்னையை சேர்ந்த பாபு மாதவன் மற்றும் ஆந்திரா மாநிலம் கடப்பாவை சேர்ந்த கவுஸ் பீர் ஆகிய இருவரிடமிருந்து 28 புள்ளி 38 இலட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நட்த்திய சோதனையில் 53இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 635 கிராம் எடைக்கொண்ட தங்கம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Related Posts