செய்யாறு அருகே வேன் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி

செய்யாறு அருகே லாரியும், வேனும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நேற்று இரவு மஞ்சள்நீராட்டு விழா நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் கிராமத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் புறப்பட்டனர். வேன் செய்யாறை அடுத்த தும்பை என்ற இடத்தில் வந்தக் கொண்டிருந்த வேனும், , செய்யாறில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி செங்கல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் வேனின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. லாரியும் ஒருபுறமாக கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களின் அலறலைக் கேட்டு ஓடி வந்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்ததும் செய்யாறு போலீசார் மற்றும் உதவி  ஆட்சியர் அன்னம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் வேனில் வந்தவர் 4 பெண்கள், வேன் ஓட்டுநர் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிழந்தனர்,. லாரியில் இருந்து சரிந்த செங்கற்களுக்கு அடியில் சிக்கி ஒருவர் உயிழந்தார். மேலும் வேனில் பயணம் செய்தவர்களில் 31 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக 7 பெண்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.உயிரிழந்த 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக செய்யாறு- காஞ்சிபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Posts