செரீனா வில்லியம்ஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா-வுடன் பலப்பரிட்சை நடத்தினர். பரபரப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் 6-3, 6-1 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று செரீனா வில்லியம்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவில் 101 வெற்றிகளை அவர் பதிவு செய்துள்ளார்.

Related Posts