செவிலியர்களுக்கு தனி பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக விரைவில் முடிவு

செவிலியர்களுக்கு தனி பல்கலைக்கழகம் அமைக்க முதலமைச்சருடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-12

சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதன் முறையாக இந்திய அளவில் செவிலியர் மாநாட்டை ஆளுநர் துவக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் ஆண்டிற்கு சுமார் 20 ஆயிரம் அளவில், செவிலியர்கள் பயிற்சி பெறுவது பெருமைக்குரியது என்று அவர் கூறினார். செவிலியர்களுக்கு தனி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

Related Posts