செவ்வாய் கிரகத்திற்கு சிறிய ரக ஹெலிகாப்டரை அனுப்ப நாசா திட்டம்

செவ்வாய் கிரகத்திற்கு சிறிய ரக ஹெலிகாப்டரை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா: மே-12

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ரோவர் விண்கலம் மூலம் நாசா ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, சிறிய ரக ஹெலிகாப்டர் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது. 2020-ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தப்பட உள்ள ரோவர் விண்கலத்துடன் இந்த ஹெலிகாப்டரையும் சேர்த்து அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஒரு லட்சம் அடி உயரத்தில் இந்த ஹெலிகாப்டர் பறக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. கியூரியாசிட்டி ரோவர் வாகனத்தால் செல்லமுடியாத இடங்களை எளிதாக ஆய்வு செய்ய சிறிய ஹெலிகாப்டர் பயன்படும் என்றும் நாசா விளக்கமளித்துள்ளது.

Related Posts