சேகர் ரெட்டி மீதான எஃப்.ஐ.ஆர்.களை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் 34 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது தொடர்பான 2  முதல் தகவல் அறிக்கை பதிவுகளை ரத்து செய்து சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை : ஜூன்-27

கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது இந்தியா முழுவதும் தொழிலதிபர்களின் வீடுகளில் சி.பி.அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது, சென்னையில் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சோதனையில் ஒன்பதரை கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் பெருமளவு தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சேகர் ரெட்டி மீது, சி.பி.வழக்கு பதிவு செய்தது.  புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக சேகர் ரெட்டி, பிரேம் குமார், ஸ்ரீனிவாசலு, ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் மீது பதியப்பட்ட 3 முதல் தகவல் அறிக்கைகளில் இரண்டை ரத்து செய்ய வேண்டும் என சேகர் ரெட்டி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் ஒரே குற்றத்திற்காக பதியப்பட்ட 3 முதல் தகவல் அறிக்கைகளில், 2வது மற்றும் 3வது பதிவுகளை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் முதலில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைப் பதிவின் அடிப்படையில், சேகர் ரெட்டியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

Related Posts