சேமிப்பு தொட்டியின் அடியில் கழிவுடன் கலந்திருக்கும் கந்தக அமிலத்தை வெளியேற்றுவது குறித்து ஆலோசனை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், சேமிப்பு தொட்டியின் அடியில் கழிவுடன் கலந்திருக்கும் கந்தக அமிலத்தை வெளியேற்றுவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி : ஜூன்-24

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலக் கசிவு ஏற்பட்டதை அடுத்து, அதனை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த 7 நாட்களில் 94 டேங்கர் லாரிகள் மூலம், 2 ஆயிரத்து 124.78 மெட்ரிக் டன் கந்தக அமிலம் ஆலையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக சேமிப்பு தொட்டியின் அடியில் கழிவுகளுடன் கலந்திருக்கும் கந்தக அமிலத்தை மோட்டார் இயந்திரத்தின் மூலம் வெளியேற்ற முடியாது என்பதால், மாற்று வழிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Posts