சேரிடான் உள்ளிட்ட 328 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தடை

ஆபத்து விளைவிக்க கூடிய சேரிடான் உள்ளிட்ட 328 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. மேலும் இந்த தடை உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

      கடந்த 2016 ம் ஆண்டு மார்ச் மாதம் 344 மருந்துகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. பின்னர் மேலும் 5 மருந்துகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தடை விதிக்கப்பட்ட மருந்துகளை ஆய்வு செய்யும்படி மருந்து தொழில்நுட்ப ஆலோசனை கழகத்தை கேட்டுக் கொண்டது. அதன்படி,  மருந்து தொழில்நுட்ப ஆலோசனை கழகம் ஆய்வு மேற்கொண்ட போது 328 மருந்துகளில் வேதி பொருட்களின் சேர்க்கை விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், இவைகள் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது எனவும் தெரிவித்தது. இதனையடுத்து சேரிடான் உள்ளிட்ட ஆபத்து விளைவிக்க கூடிய 328 மருந்துகளை தடை செய்வதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  அறிவித்துள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

Related Posts