சேலத்தில் ஓய்வூதிய திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டார வேளாண்மை அலுவலகத்தில் பிரதான் மந்திரி கிஸான் மாத்தான் யோஜனா என்ற விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த திட்டத்தில் சேர 18 முதல், 40 வயது வரையுள்ள விவசாயிகள், 60 வயதுக்கு பிறகு, மாதந்தோறும், 3,000 ரூபாய் பெறுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி விவசாயிகளுக்கான இந்த ஓய்வூதிய திட்டம், ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் எனவும் விவசாயிகள் தங்கள் வாரிசுகளை இத்திட்டத்தில் சேர்த்து, வாழ்நாள் முழுவதும் பயனடையச் செய்யலாம் எனத் தெரிவ்வித்தார்.

Related Posts