சேலம் அருகே தேர்தல் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 100 கிலோ தங்கம் சிக்கியுள்ளது!

சேலம் மக்களவைத்  தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந் நிலையில் சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தலைமையில் போலீசார் இன்று காலை வாகன சோதனை நடத்தினர்.அப்போது, அந்த வழியாக சென்னையில் இருந்து சேலத்தை நோக்கி சென்ற  வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 100கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்கத்திற்கான உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என வேனில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து 100 கிலோ தங்கத்தையும்பறிமுதல் செய்து தேர்தல் உதவி அலுவலரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.இதேபோல்,  கடந்த 27-ந்தேதி காலை ஆத்தூர் பிரிவு ரோடு குறுக்கு சாலையில்  7 கிலோ தங்க நகைகள் மற்றும், 28-ந்தேதி காலை கொண்டலாம்பட்டியில் 73 கிலோ தங்கம் வாகன சோதனையின் போது பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல், கரூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி  வேனில் கொண்டு செல்லபட்ட 450 கிலோ வெடி மருந்து மற்றும் ஆயிரத்து 100 ஜெலட்டின் குச்சிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து  கோட்டாச்சியர் சரவண மூர்த்தியிடம் ஒப்படைத்தனர்

Related Posts