சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்  நிதின் கட்கரி உறுதி

சென்னை-சேலம் எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.அத்துடன் இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை எட்டு வாரத்துக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணணை ஆதரித்து சேலத்தில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,  சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று கூறினார். சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் பேசி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேலம்-சென்னை எட்டு  வழி பசுமைச் சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் எனவும் . கடலில் வீணாக கலக்கு கோதாவரி நதியின் உபரி நீரை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்தார். பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் இந்த திட்டம் முதலில் தொடங்கப்படும் எனவும்,  இதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும் எனவும் நிதின்கட்கரி தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் முத்ல அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Posts