சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கத்தில் விவசாயிகள் போராட்டம்

சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கத்தில் விவசாயிகள் விளை நிலத்தில் நட்டுவைக்கப்பட்ட கல்லை பிடுங்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை : ஜூன்-29

சேலம் – சென்னை இடையிலான 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இன்று 3-வது நாளாக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிலம் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நிலத்தை அளந்து நட்டு வைத்திருந்த கல்லையும் அவர்கள் பிடுங்கி எறிந்தனர். நிலம் எடுப்பதாக முன்கூட்டியே ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து, விவசாயிகள் அவர்களது நிலத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

Related Posts