சேலம் சென்னை 8 வழி சாலை உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு ஏற்று கொள்ள வேண்டும்:நல்லகண்ணு

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 8 வழி சாலை விசயத்தில் நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கூறினார்.

டெல்டா மாவட்ட கடல் பகுதிகளில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு மக்களிடம் கருத்து கேட்காமல் அத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று அவர் தெரிவித்தார்.

Related Posts