சேலம் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மூளை சாவு அடைந்தவரின் உடலுறுப்புகளை திருடிய சேலம் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளா : மே-26

கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த  மணிகண்டன் என்பவர் கடந்த 18 ஆம் தேதி 6 பேருடன் சென்னையிலிருந்து காரில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் அருகே விபத்து ஏற்பட்டதில், பலத்த காயமடைந்த ஓட்டுநர் மணிகண்டன், சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த மணிகண்டன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் கடந்த 20 ஆம் தேதி தெரிவித்தனர். இதையடுத்து சிகிச்சை கட்டணமாக மூன்றரை லட்சம் ரூபாயையும், அவரது உடலை பாலக்காடு வரை கொண்டு சேர்க்க 25 ஆயிரம் ரூபாயையும்  அவரது குடும்பத்தினரிடம் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளது. ஆனால் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து மணிகண்டனின் உடலுறுப்புகளை எடுத்து கொண்டு, அவரது உடலை மட்டும் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் மணிகண்டனின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அதில், மூளை சாவு அடைந்தவரின் உடலுறுப்புகளை திருடிய சேலம் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts