அரசியல்

சேவை மனது படைத்தவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும் : அறநெறி மக்கள் கட்சி செயலாளர்

தஞ்சையில் அறநெறி மக்கள் கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் ஆரோக்கிய சார்லஸ் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, பொதுச்செயலாளர் ஆயர் ஜேம்ஸ் முன்னிலை வகித்தார். அறநெறி மக்கள் கட்சியின் தலைவர் விசனூர் தளபதி கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி வைத்து விழாவை துவக்கி வைத்து பேசினார். அதில், “சேவை மனது படைத்தவர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும், ஆனால்,  தற்போது அந்த நிலை இல்லை என்றும், எனவே இளைய தலைமுறையினர் அரசியலில் நுழைவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும்” எனவும் அவர் கூறினார்.  ஏராளமானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதியில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Show More

Related News

Back to top button
Close