சைத்ர நவராத்திரி வட மாநிலங்களில் காளி கோவில்களில் மக்கள் வழிபாடு

சக ஆண்டின் தொடக்கமான சைத்ர மாதத்தில் அமாவாசையை அடுத்த 9 நாட்களை சைத்ர நவராத்திரியாக வட மாநிலத்தவர் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி இன்று சைத்ர மாத நவராத்திரி தொடக்க நாளாகும். மும்பையில் உள்ள மும்பாதேவி ஆலயத்தில் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் வரிசையில் நின்று வழிபட்டு வருகின்றனர்.

இதேபோல் உத்தரப்பிரதேசம் அயோத்தியில் உள்ள தேவிகாளி கோவிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

வாரணாசி துர்க்கா குண்டம் கோவிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். டெல்லி ஜாண்டேவாலன் கோவில், கல்காஜி மாதா கோவில் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று வழிபட்டு வருகின்றனர்.

Related Posts