சொட்டு நீர் கூட வீணாகாமல் சேமிக்க நடவடிக்கை : முதலமைச்சர் பழனிசாமி

ஒரு சொட்டு மழை நீர் கூட வீணாகாமல், அதனை சேமிக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் மக்கள் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அப்போது மக்களிடம் மனுக்களை பெற்ற அவர், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி உரையாற்றிய அவர், மழை நீர் சேமிப்பில் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து வருவதாக கூறினார். ஒரு சொட்டு மழை நீர் கூட வீணாகாமல்,  ஏரி, குளங்களை தூர்வாரி சேமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தடுப்பணை விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எதிர்கட்சியினர் பொய் பிரச்சாரங்களை பரப்புவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

Related Posts