சோனியாகாந்தியுடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கமல்ஹாசன் ஆலோசனை

டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியுடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்  கமல்ஹாசன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

டெல்லி : ஜூன்-20

டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்  கமல்ஹாசன்  நேற்று நேரில் ஆஜராகி, கட்சி தொடர்பான விளக்கங்களை அளித்தார். அதன்பின்னர் அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து  அரசியல் நிலவரம் குறித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியை இன்று காலை 11 மணிக்கு கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,தமிழக அரசியல் சூழல் பற்றி பேசியதாகவும், மக்களவை தேர்தல் பற்றி தற்போது பேசவில்லை என்றும் கூறினார்.

Related Posts