சோழவரம் அருகே டேங்கர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி மூன்று பேர் உயிரிழப்பு

சோழவரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

மீஞ்சூர் அருகே உள்ள பள்ளிப்புரம் பகுதியை சேர்ந்த அஜித், தனது நண்பர்களான சீமாவரம் சந்துரு, மாரி ஆகியோருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் சோழவரம் அருமந்தை பைபாஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டேங்கர் லாரி மீது இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts