ஜனக்பூர் – அயோத்தி இடையே பேருந்து சேவை தொடக்கம்

நேபாளத்தின் ஜனக்பூர் – இந்தியாவின் அயோத்தி இடையே பேருந்துப் போக்குவரத்தைப் பிரதமர் நரேந்திர மோடியும் நேபாளப் பிரதமர் கட்க பிரசாத் சர்மா ஒலியும் தொடங்கி வைத்தனர்.

ஜனக்பூர் : மே-11

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேபாளத்துக்குச் சென்றார். ஜனக்பூர் விமான நிலையத்தில் அவரை நேபாள அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பின்னர் நேபாளப் பிரதமர் சர்மா ஒலியுடன் அவர் அங்குள்ள ராமர் கோவிலுக்குச் சென்று வழிபட்டார். அதன் பின்னர் நேபாளத்தின் ஜனக்பூர், இந்தியாவின் அயோத்தி இடையே பேருந்துப் போக்குவரத்தை இருவரும் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களைச் சுற்றிப் பார்க்கும் வகையில் ஒரு ஆன்மீகச் சுற்றுலாவை இருநாடுகளும் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இதன்மூலம் இரு நாட்டு மக்களுக்கும் இடையே தொடர்பு மேலும் வலுப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.

இதையடுத்து, நேபாள பிரதமர் சர்மா ஒலியும், பிரதமர் நரேந்திர மோடியும் முக்கியப் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், இருநாட்டு பிரதமர்களின் முன்னிலையில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts