ஜனநாயகத்தை வலுப்படுத்த மக்கள் வாக்களிக்க வேண்டும்: ஆணையர் சுனில் அரோரா வேண்டுகோள்

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள், மே, 23ல் அறிவிக்கப்பட உள்ளன. இதில், பீகார், உ.பி., மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்கள், ஏழு கட்டங்களிலும் தேர்தலை சந்திக்கின்றன. தமிழகத்தில் ஏப்ரல் 18ல் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வன்முறைப் பாதிப்பு உள்ள இடங்களில் மட்டும் வாக்குப் பதிவு நேரம் காலை 7மணி முதல் மாலை 3 மணி வரைதான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில்  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஜனநாயகத்தை வலுப்படுத்த மக்கள் பெருவாரியாக வந்து வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். அதிகளவில் பொதுமக்கள் ஓட்டு சாவடிக்கு வந்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர்,  ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆர்வத்துடன் பொதுமக்கள் ஓட்டு போட்டால், தேர்தல் ஆணையத்தின் பணி பலனளிக்கும்  என்று அவர் கூறினார்.

Related Posts