ஜப்பான் மோட்டோ ஜிபி பைக் பந்தயம்: மார்க் மார்க்யூஸ் 5வது முறையாக சாம்பியனாக வாய்ப்பு

ஜப்பானில் நடைபெற்ற மோட்டோ ஜிபி பைக் பந்தயத்தில் வெற்றி பெற்ற மார்க் மார்க்யூஸ் 5வது முறையாக சாம்பியன் பட்டத்திற்கான வாய்ப்பை உறுதி செய்தார்.

உலகம் முழுவதும்19 சுற்றுகளாக நடைபெற்று வரும் மோட்டோ ஜிபி பந்தயத்தின் 16வது சுற்று ஜப்பானில் உள்ள பந்தய ஓடுதளத்தில் 24 லேப்ஸ்களாக நடைபெற்றது. தொடக்கத்தை நடப்பு சாம்பியனான மார்க் மார்க்யூஸ் 6வது இடத்தில் இருந்து தொடங்கினார்.

விறுவிறுப்பான இந்த பந்தயத்தில் 42 நிமிடங்கள் 36 வினாடியில் இலக்கை கடந்து ஹோண்டா வண்டியை இயக்கிய ஸ்பெயின் வீரர் மார்க் மார்க்யூஸ் முதலிடம் பிடித்து 25 புள்ளிகள் பெற்றார்.

ஒட்டுமொத்தமாக, 296 புள்ளிகள் பெற்றுள்ள மார்க்யூஸ் 3 சுற்றுகள் மீதமிருக்கும் போதே, சாம்பியன் பட்டத்திற்கான வாய்ப்பை உறுதி செய்தார். 5வது முறையாக மார்க் மார்க்யூஸ் பட்டம் வெல்வது குறிப்பிடத்தக்கது.

 

Related Posts