ஜம்மு-காஷ்மீரின் சோபூரில் தீவிரவாதிகள் தாக்கி 4 பேர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீரின் சோபூர் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தாக்குதலில் பெண் குழந்தை உள்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வடக்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் சோபூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள டேங்கர்பூரா என்ற இடத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தீவிரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில், உஸ்மான் ஜான் என்ற 2 வயது பெண் குழந்தை உள்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்துள்ள நான்கு பேரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் நிலைமை தற்போது சீராக உள்ளதாகவும் காஷ்மீர் மண்டல போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Posts