ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி

ஜம்மு-காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் : மே-28

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்றிரவு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், ராணுவ வீரர் ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்ட நிலையில், தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், ஷோபியான் மாவட்டத்தின் சில்லிபோரா பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கண்ணிவெடியில் சிக்கியது. இதில் ரோந்து சென்ற 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Related Posts