ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில், சி.ஆர்.பி.எஃப். வீரர் ஒருவர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில், சி.ஆர்.பி.எஃப். வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீர் : மே-12

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் பார்போரா பகுதியில் தீவிரவாதிகள் சிலர் ஊடுருவியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, , சி.ஆர்.பி.எஃப்.மற்றும் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நேற்றிரவு முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ராணுவத்தினர் வருவதை அறிந்த தீவிரவாதிகள் திடீரென அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, ராணுவத்தினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. இதில், சி.ஆர்.பி.எஃப். வீரர் ஒருவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இளைஞர்கள் சிலர் ராணுவத்தினர் மீது கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட தீவிரவாதிகள், அங்கிருந்து தப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts