ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ- தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

புல்வாமா மாவட்டத்தில் உள்ள லஸ்சிப்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில், குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், லஷ்கர் -இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts