ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார்.

            ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள தூரு என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு படையினரும் அந்த பகுதியை இன்று அதிகாலை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள சேவைகளை அதிகாரிகள் நிறுத்திவைத்தனர். தேடுதல் வேட்டையின் போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை முன்னேற விடாமல் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

Related Posts