ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது

ஜம்மு-காஷ்மீரில் பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் : ஜூன்-27

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அமர்நாத் மலையில் இயற்கையிலேயே பனிலிங்கம் உருவாகிறது. இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் அமர்நாத் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டு புனித யாத்திரையில் பங்கேற்க சுமார் 2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், புனித யாத்திரை மேற்கொள்ளும் முதல் குழுவினர் ஜம்மு-காஷ்மீரிலிருந்து இன்று அதிகாலையில் தங்கள் யாத்திரையை தொடங்கினர். யாத்திரையை காஷ்மீர் மாநில தலைமை செயலாளர் பி.வி.ஆர். சுப்பிரமணியன், ஆளுநரின் ஆலோசகரான ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிலையில், யாத்திரை செல்லும் பாதைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிஆர்பிஎஃப் துணை ராணுவத்தினர், உள்ளூர் காவல்துறையினர் உட்பட சுமார் 40 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts