ஜம்மு-காஷ்மீரில் பாக். படையினர் அத்துமீறி தாக்குதல் – பொதுமக்கள் 6 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்தியத் தாக்குதலில், எட்டு மாத குழந்தை உள்பட 6 பேர்  உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் : மே-22

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் நேற்று அதிகாலை முதல் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலையில் ஆர்னியா பகுதியில் நிலைகொண்டுள்ள இந்தியப் படைகளை குறிவைத்து, சிறிய ரக மோட்டார் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் படையினர், ஆர்.எஸ்.புரா பகுதியிலும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாகிஸ்தான் படைக்கு, இந்திய ராணுவ வீரர்கள் கடும் பதிலடி தாக்குதலை கொடுத்தனர். இருப்பினும், பாகிஸ்தான் படையினரின் தாக்குதலில் எல்லையோரக் கிராமங்களில் உள்ள வீடுகள் பாதிக்கப்பட்டன. இதில், 8 மாதக் குழந்தை உள்பட அப்பாவி பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். எல்லைக்கு அருகாமையில் இருக்கும் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்கள், பாகிஸ்தான் படைக்கு தொடர்ந்து பதில் தாக்குதல் கொடுத்து வருகின்றனர்.

Related Posts