ஜம்மு காஷ்மீரில் பாக். படையினர் அத்துமீறி தாக்குதல் – ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்தார்.

ஜம்மு காஷ்மீர் : மே-15

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா செக்டார் அருகே எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகளை குறிவைத்து இன்று காலை தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி மற்றும் சிறிய ரக மோட்டார் குண்டுகளால் பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு, இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் தேவேந்திர குமார் என்பவர் வீரமரணமடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி வரும் 19-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வருகை தரும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாநிலத்தின் பதற்றமான பகுதிகளில் தொடர்ந்து 2-வது நாளாக இந்திய ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts