ஜம்மு-காஷ்மீரில் பாக். ராணுவத்தினர் நடத்திய தாக்குதல் – பாதுகாப்புப்படை வீரர் பலி

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீர் : மே-18

ஜம்மு மாவட்டத்தின் எல்லையோரத்தில், இந்திய நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அதிகாலையில், துப்பாக்கிகளாலும், சிறிய ரக மோட்டார் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில், ஆர்.புரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன், பொதுமக்கள் 3 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் படைக்கு, இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர்.

இதனிடையே, பந்திபோரா பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக, எல்லைப் பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. அங்கு அவர்கள் சென்றபோது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள், ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts