ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் அருகே பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்,  அனந்த்நாக் அருகே பிஜ்பெஹாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி  துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து இரு தரப்பினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் அந்தப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்று பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts