ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக, அமர்நாத் யாத்திரை ஒத்திவைப்பு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக, அமர்நாத் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் : ஜூன்-28

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அமர்நாத் மலையில் இயற்கையிலேயே பனிலிங்கம் உருவாகிறது. இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் அமர்நாத் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டு புனித யாத்திரையில் பங்கேற்க சுமார் 2 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், புனித யாத்திரை மேற்கொள்ளும் முதல் குழுவினர் ஜம்மு-காஷ்மீரிலிருந்து நேற்று அதிகாலையில் தங்கள் யாத்திரையை தொடங்கினர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக, அமர்நாத் யாத்திரை இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழை நின்ற பின்னர், பாத யாத்திரை மேற்கொள்வதற்கான பாதுகாப்பான நிலையை உறுதி செய்த பின்னர், பனிலிங்கம் உருவாகும் புனித குகைக்குச் செல்ல யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts