ஜம்மு-காஷ்மீரில் ரஜோரி வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தொடர்ந்து தீப்பற்றி எரிவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் : மே-29

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு தீ எரிந்து வருகிறது. தீயை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தீ எரியும் வனப்பகுதியைச் சென்றடைவது கடினமாக இருப்பதால், அதனை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், வனப்பகுதியில் பற்றி எரியும் தீயில் இருந்து வரும் அனலும், புகையும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து வருகிறது. அப்பகுதியை ஒட்டி உள்ள சாலைகளில், வாகனம் மற்றும் பேருந்துகளில் செல்ல முடியாமல் தவிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Posts